மட்டக்களப்பில் பொதுமக்களை தண்டித்த இராணுவத்தினர்! இராணுவத் தளபதியின் அதிரடி நடவடிக்கை
ஏறாவூரில் பொதுமக்களை தண்டித்த படைவீரர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில் இவர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஏறாவூரில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சில பொதுமக்களை இராணுவத்தினர் வீதியில் முழந்தாளிடச் செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் விசாரணைகளை இராணுவ பொலிஸார் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் குற்றச் செயலுடன் தொடர்புடைய அனைத்து படைவீரர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.




ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
