ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை இடைநிறுத்தம்
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக சீர்குலைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்து இருந்தது.
இதற்கு அமைய நாளைய தினம் முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்கவும் தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்திற்கு அமைய நாளைய தினம் முதல் சுற்றுலாப் பயணிகள் குழுவாக ரஷ்யாவில் இருந்து 200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவிருந்தனர்.
ரஷ்யாவின் விமான சேவையான Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் இலங்கை வரவிருந்தனர்.
எனினும் இவர்களின் வருகை அவசரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபே இதற்கு காரணம்.
இந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை சில தினங்களுக்கு மாத்திரமே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் சில தினங்களின் பின்னர் அவர்கள் இலங்கை வருவார்கள் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam