நாடாளுமன்றின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம்
நாடாளுமன்றின் அனைத்து செற்பாடுகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இயங்கி வந்த அனைத்து காரியாலயங்களினதும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 7ம் திகதி வரையில் அனைத்து காரியாலயங்களினதும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதனால் நாடாளுமன்ற அலுவலகங்களின் பணியாளர்களும் பணிக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் எவரும் கடமையில் ஈடுபடப் போவதில்லை.
இதேவேளை, எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடாத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றை கூட்டுவது தொடர்பில் எதிர்வரும் 7ம் திகதி தீர்மானி;க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.