வவுனியாவில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கு சிலை:வீதி அபிவிருத்தி அதிகாரசபை எடுத்துள்ள நடவடிக்கை
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே புளொட் அமைப்பின் தலைவர் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் ஆகிய இருவருக்கும் சிலைகள் நிறுவுவதற்கு நகரசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரசபையின் எல்லை
எனினும் அப்பகுதி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக்குள் வருவதால் அனுமதியற்ற குறித்த கட்டடத்தை நிறுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நகரசபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக நகரசபையிடம் கேட்கப்பட்ட கோரிக்கைக்கு இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநரின் அனுமதி பெறப்பட்டு சிலை அமைக்கப்படுவதாக தவிசாளர் தெரியப்படுத்தினார்.
எனினும் ஆளுநர் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலை அமைப்பதற்கு தீர்மானம்
நகரசபை உறுப்பினர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உமாமகேஸ்வரன் மற்றும் பத்மநாபா ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பக்கட்டப் பணிகள் இடம்பெற்றபோது இதனை தமது எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் குறித்த கட்டடம் அமைவதாகவும் அனுமதியற்ற முறையில் அமைக்கப்படும் கட்டடத்தை இடை நிறுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை நகரசபைக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


