எரிபொருள் தட்டுப்பாடு: இடைநிறுத்தப்பட்ட அவசர நோயாளர் காவு வண்டி சேவை
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் அவசர நோயாளர் காவு வண்டி சேவையை இடைநிறுத்தியுள்ளதாக 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது.
இச் சேவையானது நேற்று (10) மாலை 4.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டதாக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சுவசேரிய அம்புலன்ஸ் சேவையின் அறிவிப்பு
எனவே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பின்வரும் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் தமது சேவை இடம்பெறாது என சுவசேரிய அம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளது.
எனவே, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்,1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு சேவையை கோருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியாவில் நோயாளர் காவு வண்டி சேவை முடக்கம்(Photo) |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
