வவுனியாவில் நோயாளர் காவு வண்டி சேவை முடக்கம்(Photo)
வவுனியாவில் 1990 நோயாளர் காவு வண்டி சேவையை முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் அவசர நோயாளர் காவு வண்டி சேவையான 1990 சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் வழங்கப்படவுள்ள நிலையில் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் டீசல் நிரப்புவதற்காக நோயாளர் காவு வண்டி வரிசையில் காத்து நிற்கின்றது.
வார நாட்களில் இலங்கை போக்குவரத்து சபையால் எரிபொருள் வழங்கப்பட்டாலும் வார இறுதி நாட்களில் எரிபொருள் இல்லாமல் குறித்த சேவைகள் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
சேவை முடக்கம்

கடந்த வாரங்களில் இ.போ.சவினரால் மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பு காரணமாக எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்பட்டதுடன், ஐ.ஒ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் அவசர சேவைக்கான எரிபொருட்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ளப்படாத நிலைமையும் உள்ளது.
தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியால் பொதுமக்களின் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு திடீர் நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் இறப்புக்கள் பதிவாக கூடிய அதிக சந்தர்ப்பம் உள்ளது.
நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் இயங்கும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் இரண்டு வண்டிக்கு டீசல் இல்லாத அபாய நிலை உருவாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam