பெட்ரோல் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு (Photos)
வவுனியாவில் பெட்ரோல் வரிசையில் நின்றுவிட்டு இளைபாறச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வவுனியா- பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்தபோதே இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 5 தினங்களாக பெட்ரோல் வழங்கப்படாத நிலையில் மோட்டர் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு குடும்பஸ்தர் ஒருவர் எரிபொருளுக்காக காவல் நின்றுள்ளார்.
எரிபொருள் இன்மை
பெட்ரோல் கிடைக்காமையால் இன்றும் நீண்ட நேரம் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காக நகரசபை முன்பாக உள்ள கடைப் பகுதிக்கு சென்ற போது குறித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை அருகில் நின்ற மோட்டர் சைக்கிளில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் வவுனியா நகரசபையில் சுகாதார ஊழியராக கடமையாற்றும் வவுனியா- கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் செல்வகுமார் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை மக்கள் (Video) |







உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
