யாழ்ப்பாணம் - கிளிநொச்சி விசேட புகையிரத சேவை: மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்பு(Photo)
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி விசேட புகையிரத சேவை இன்று(11) ஆரம்பமாகியது.
இன்று காலை 7.50 மணியளவில் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்த பிரயாணிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் வரவேற்றார்.
அரசாங்க அதிபருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மாவட்ட இணைப்பாளர் வை.தவநாதன், மேலதிக இணைப்பாளர் றுசாங்கன், திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தொடருந்து சேவை
காங்கேசன்துறை – முறிகண்டி இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு பயணிகள் சேவையில் யாழ்.ராணி தொடருந்து இயக்கப்படும். தினமும் இரண்டு சேவைகள் இடம்பெறும்.
காங்கேசன் துறையிலிருந்து முறிகண்டி நோக்கி காலை 6 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படுவதுடன், கிளிநொச்சியிலிருந்து காங்கேசன்துறை நோக்கி முற்பகல் 10 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படும்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக மூன்றாம் வகுப்புக்குரிய 90 ரூபாய் கட்டணமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும்.
தொடர்புடைய செய்தி
காங்கேசன்துறை-முறிகண்டி இடையேயான யாழ்.ராணி தொடருந்து சேவை நாளை ஆரம்பம் |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
