தடுப்பூசி போட இணையம் வழியாக நேரத்தை ஒதுக்கும் வசதி இடைநிறுத்தம்
கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக இணையத்தளம் ஊடாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வழங்கப்பட்டிருந்த வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையானது மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஈ செனலின் சேவை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கோவிட் தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தில் மேல் மாகாணத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தொடர்ந்தும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை இணையத்தளம் வழியாக நேரத்தை ஒதுக்கி, தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதற்காக மக்களை தொடர்புப்படுத்தும் வேலைத்திட்டத்தை உருவாக்கி வருவதாக இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் இணையத்தளம் வழியாக தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் வசதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தடுப்பூசி போடும் நிலையங்களுக்கு அருகில் மீண்டும் கூட்ட நெரிசல் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.