போராட்டகாரர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்! செய்திகளின் தொகுப்பு (Video)
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினரால், இன்று (22) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது.
இது நிறைவேற்று அதிகாரியின், நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் செயலாகும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை, ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது என்பதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களையும் மற்றும் பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,



