யாழில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட உணவகம் (video)
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஏழு சந்தேகநபர்களை கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே நேற்று(20.04.2023) இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் பகுதியில் உள்ள உணவகத்திற்கு 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட குழு கார் ஒன்றில் வந்து இறங்கி, உணவகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து உணவகத்திற்குள் அத்துமீறி நுழைந்து உரிமையாளர் மீது சாணத்தினை கரைத்து ஊற்றி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பெறுமதியான உடைமைகள் சேதம்
இந்த தாக்குதல் சம்பவத்தால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam