மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திலிருந்த சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
மிஹிந்தலை பொலிஸ் நிலைய தடுப்புக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை (04) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
சந்தேகநபர்கள் கைது
மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று (03) மாலை ஐஸ் போதைப்பொருளுடன், மிஹிந்தலை அம்பதலாகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரு சந்தேகநபர்களுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய இன்றைய தினம் அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (04) அதிகாலை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டின் பூட்டைத் திறந்து தப்பிச்சென்றுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.