கொழும்பின் தெற்கு பொலிஸ் நிலையங்களில் நடைமுறைக்கு வரும் தடை
கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிரஞ்சன் அபேரத்னவினால் நேற்று (08.02.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் நஞ்சூட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரஹேன்பிட்ட, கிருலப்பனை, பம்பலப்பிட்டிய, வௌ்ளவத்தை, கொள்ளுப்பிட்டிய , பொரளை மற்றும் கருவாத்தோட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதைத் தடை செய்யுமாறும் அதற்குப் பதிலாக பொலிஸ் நிலையத்தில் வழங்கப்படும் உணவையே சந்தேக நபர்களுக்கு வழங்குமாறும் கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
