போதைப்பொருளுடன் வசமாக சிக்கிய சந்தேகநபர்கள்
முல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் வைத்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தரொருவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த போது, அவரிடம் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் சிறப்பு அதிரடிப்படையினர், உடமையில் 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபரை மாங்குளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து 230 கிராம் போதைப்பொருளுடன் இளம் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை நேற்றுமுன் தினம் (6) மாலை இடம்பெற்றுள்ளது.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கல்குடாவில் இருந்து ஐஸ் போதைப்பொருளை முச்சக்கரவண்டியில் எடுத்துக் கொண்டு சென்ற சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 230 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைதானவர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு செய்தி - பவன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் 24 வயதான குறித்த சந்தேகநபரை நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே சில குற்றச்செயல்கள் தொடர்பிலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




