நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குற்றசெயல்கள்: பலர் கைது
முல்லைத்தீவு-கேப்பாபிலவு
காட்டுப்பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கி மற்றும் கசிப்பு
என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பினை சேர்ந்த நபரே நேற்றையதினம்(09.05.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 20 லீற்றர் கசிப்பும் நாட்டுத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி- களவெட்டித்திடல் பகுதியை சேர்ந்த ஒருவரை கூரிய ஆயுத்தால் தாக்க முற்பட்ட சந்தேகநபரை தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியை சேர்ந்தவரே நேற்றையதினம்(09.05.2023) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து வாள், இரும்பு கம்பி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும், கைதான சந்தேகநபருக்கு சுன்னாகம் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்பான வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி- எரிமலை
மட்டக்களப்பு
மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேசத்தில் 300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் மூவரும் இன்றையதினம்(11.05.2023) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 25,28 மற்றும் 33 வயதுடையவர்களும் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி-பவன்



