யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(25) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில்,அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தெ.கோபாலசாமி (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று அதிகாலை 3.00 மணியளவில் அங்கு இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
மரண விசாரணை
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
