காத்தான்குடியில் நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது: மீட்க்கப்பட்டபெருமளவு நகைகள்
காத்தான்குடி பகுதியில் உரிமையாளர்கள் வீட்டிலில்லாத போது கூரையை உடைத்து வீட்டினுள் இறங்கி நகைகளைக் கொள்ளையிட்ட 4 இளைஞர்களை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள டீன் வீதியில் வீடொன்றின் உரிமையாளர்கள் கொழும்புக்குச் சென்றிருப்பதை அறிந்த திருடர்கள் வீட்டின் கூரையை உடைத்து உள்ளே இறங்கி அலுமாரியை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது, திருடப்பட்ட நகைகளை மூதூரிலுள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்துள்ள நிலையில் குறித்த கடையிலிருந்து நகைகள் மீட்கப்பட்டதுடன் நகைக் கடை உரிமையாளரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த 23,19,17.19 ஆகிய வயதுடைய நான்கு நபர்களையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படவுள்னதாக பொலிஸார் தெரிவித்தனர். .
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |