யாழில் தேக்குமரக் குற்றிகளுடன் சந்தேகநபர் கைது (Photos)
யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி சோதனை நடவடிக்கையின் மூலமாக, சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் 7இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (28.08.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற டிப்பர் வாகனத்தில் கருங்கல் கிரவலுக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட 22 தேக்குமரக் குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீசாலை பகுதியில் கடமையில் நின்றிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரே குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைதான சந்தேகநபரை நாளை (29.08.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர் பொலிஸாருக்கு 5இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்ட போதிலும் கைது நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam