பிணை வழங்கப்படாததால் நிதீமன்றத்துக்குள்ளேயே சந்தேகநபர் செய்த மோசமான செயல்
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர், தனக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்படாததால் கழுத்திலும் கையிலும் சிறிய கூரிய ஆயுதத்தால் தன்னை தானே காயப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (23.10.2024) பருத்தித்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர், கடந்த மாதமளவில் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாண் வியாபராத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து பாணை கடனுக்கு கோரியபோது, வியாபாரி கடன் கொடுக்க மறுத்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து, அவரை வாளால் காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கடை ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டிருந்த போது, கடை உரிமையாளரை வாளால் வெட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சில மாதங்களாக சந்தேகநபர் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையிலும், சந்தேகநபருக்கு பிணை வழங்காமையால் சிறையிலிருந்து கொண்டுவந்த சிறிய கூரிய ஆயதம் ஒன்றினால் தனது கழுத்து, மற்றும் கைப்பகுதியில் வெட்டி காயம் விளைவித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri