முல்லைத்தீவில் இளைஞனுக்கு எமனான நாய்
முல்லைத்தீவில், மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வேளையில், நாய் ஒன்று குறுக்கிட்டு சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு - வெலி ஓயா, கிரிப்பண்ணா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் ஒப்படைப்பு
குறித்த இளைஞன் கடந்த 20ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை நாய் ஒன்று குறுக்கே சென்ற நிலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
