வீடொன்றினை திடீரென சுற்றிவளைத்த சிஐடியினர்..! சிக்கிய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆபத்தான பொருள்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப்பிரிவு கைது செய்துள்ளது.
இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி, ஒரு வெடிக்காத கையெறி குண்டு மற்றும் 06 BMG ரக தோட்டாக்கள் ஆகியவற்றுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை
குற்றப்புலனாய்வுப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின்படி, கந்தகெதரவில் உள்ள வலக்கும்புரமுல்ல பகுதியில் நேற்று (12) வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், வலக்கும்புரமுல்ல, குளியாபிட்டியவைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.