காரைநகரில் பெருமளவான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது (Photos)
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமி பகுதியில் 125 மதுபான போத்தல்களுடன் 64 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் இணைந்து இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபர் வீட்டில் வைத்து மதுபானம் விற்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது சித்தங்கேணி மதுவரி நிலையத்தினரின் கண்காணிப்பின் கீழ் உள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri