வென்னப்புவ பகுதியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தேகநபர்! வெளியான காரணம்
வென்னப்புவ- பெரகஸ் சந்திக்கு அருகில் நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களை வாளால் தாக்கியதன் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
சந்தேகநபர் வென்னபுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் வாள்வெட்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மற்றுமொரு சந்தேகநபர் கைது
தேடப்படும் குற்றவாளிகள் இருவரை கைது செய்ய பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்த நிலையில், சந்தேக நபர் வாளால் பொலிஸாரை தாக்கியுள்ளார். இந்நிலையிலே இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றள்ளது.
தேடப்படும் மற்றைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam