பெண் மருத்துவரை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகநபர் நீதிமன்றில் கூறிய விடயம்
அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் மருத்துவரை தகாத முறைக்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ வீரரை பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் மருத்துவரை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் படைவீரர் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தம்மை கடுமையாக தாக்கியதாக அவர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றிலை முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில்..
இதன் போது குறித்த சந்தேக நபர் நேராக நிற்க முடியாதிருந்த காரணத்தினால் நீதவான் அவரை நேராக நிற்குமாறு பணித்துள்ளார்.

பொலிஸார் கடுமையாக தாக்கியதனால் தம்மால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை என சந்தேக நபர், நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்க்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam