அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு! மாணவரொருவர் பலி..
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்திலுள்ள பிராங்க்போர்ட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திடீரென துப்பாக்கிசூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் பிராங்க்போர்ட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
துப்பாக்கி சூடு
இந்தநிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் ஒரு மாணவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மாணவர் படுகாயமடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக பல்கலைக்கழகத்துக்கு வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
மேலும், படுகாயம் அடைந்த மாணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்ததால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri