யாழில் சந்தேக நபர் தப்பியோட்டம்: பொலிஸ் சார்ஜென்ட் பணி இடை நீக்கம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகவீனமடைந்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
பணி இடைநீக்கம்
இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்து , நீதிமன்றினால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் உள்ளக விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் தப்பி சென்ற நிலையில் , அன்றைய தினம் சந்தேக நபரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri