ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய சந்தேகநபர் கைது
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகநபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி, அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியமைக்காகவே இன்று(29) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடி திருட்டு
கடந்த ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்த உத்தியோகபூர்வ கொடி திருடப்பட்டுள்ளது.
கொடியை திருடியவர் வேட்டியொன்று உடுத்தி செல்லும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
சந்தேக நபர் அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்த நிலையில், அவரை தேடி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு - டாம் வீதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைபடுத்தல்
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய ஒருவரெனவும், தற்போதைக்கு துறைமுகத்தில் பணியாற்றி வரும் நிலையில், அங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஊழியர் சங்கத்தின் முன்னாள் உபதலைவராக கடமையாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறைப்பாடு |