மூன்று பேர் சுட்டுக் கொலை ..! பலர் மீது கடுமையான தாக்குதல் - சந்தேக நபர் கொழும்பில் கைது..!
கடந்த 2023ஆம் ஆண்டு அவிசாவெல்லையில் மூன்று பேரை சுட்டுக் கொன்று மற்றொரு நபரை கடுமையாக காயப்படுத்திய குற்றங்களில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், கொழும்பு - ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
மேற்கு தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுத தாக்குதல்
இந்நிலையில், விசாரணைகளில் இந்த சந்தேக நபர் கடந்த 2023ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி, அவிசாவெல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பலரை கடுமையாக காயப்படுத்திய குற்றங்களில் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.
அத்துடன் அதே ஆண்டு மே 26ஆம் திகதி, அவிசாவெல்லையில் ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவத்திலும், 20.09.2023 அன்று அவிசாவெல்லையில் மூன்று பேரை சுட்டுக் கொன்று மற்றொரு நபரை கடுமையாக காயப்படுத்திய குற்றங்களிலும் தொடர்புடையவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் கோனபால பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
