கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் வர்த்தகர்! - சந்தேகநபர் கைது
கொழும்பு புறநகர் பகுதியான தலங்கம, தலாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பிரதான சந்தேகநபர் அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபர் மொனராகல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்தபோது தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான சந்தேகநபர் கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் நண்பர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரின் காதலி என்று கூறப்படும் பெண்ணிடம் தலங்கம பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாலபே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ராஜபக்ச முதியன்சலாகே சந்தன திலக் ராஜபக்ச என்ற 46 வயதான வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை - ரத்தோட்டை பகுதியில் உள்ள காட்டில் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த வர்த்தகர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri