மலையக தமிழ் கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்
மலையகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அமெரிக்க தேசிய அணியின் வலைப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் அபிஷேக் என்ற இளைஞர், எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் வலை பயிற்சிகளுக்கான பந்துவீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அபிஷேக் தற்பொழுது இலங்கை மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அணியின் வீரர்களுக்கு பந்து வீசி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் பொஸ்கோனியன்ஸ் விளையாட்டு கழகத்தின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் மாணவர் என்பதுடன் குறித்த மாணவர் வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்துவீச்சாளராகவும் சகல துறை வீரராகவும் திகழ்ந்து வருகின்றார்.
அண்மை காலமாக நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்று வரும் போட்டி தொடர்களில் அபிஷேக் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அணிகள் அல்லது முனன்ணி கழகங்களின் துடுப்பாட்ட வீரர்களின் வலைப் பயிற்சியின் போது திறமையான பந்து வீச்சாளர்களை கொண்டு பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறு பந்து வீசக் கூடிய வீரர்களே வலைப்பந்து வீச்சாளர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam