கேரளக் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்தவருக்கு தடுப்புகாவல் உத்தரவு
கேரளக் கஞ்சாவை வீட்டில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (10) கல்முனை விசேட அதிரடிப்படையினரால் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சாவுடன் 33 வயது சந்தேக நபர் கைதாகியிருந்தார்.
இந்தநிலையில், சந்தேக நபர் இன்று (11) கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
தடுப்புகாவல்
இதன் போது, நீதிவான் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆந் திகதி 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை (10) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri