அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது: யாழில் சம்பவம் (Photos)
யாழில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச பேருந்தில் கஞ்சாவினை கடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (18.07.2023) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்நேகநபரிடமிருந்து 4 கிலோ 160 கிராம் உள்ளடங்கிய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவல்
குறித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஆனையிறவு சோதனை சாவடியில் பேருந்தினை சோதனை செய்தபோது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
