ஹரக்கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான ஹரக்கட்டா என அறியப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொடர்பைக் கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய வெல்லம்பிட்டிய ஹல்முல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இரகசிய தகவல்
குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, வெல்லம்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறையில் உள்ள உறவினர் ஒருவக்கு தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையை வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri