கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது
மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவில் பட்டியடிச்சேனை தாமரைக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து கசிப்பு மற்றும் அதற்குரிய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.
பட்டியடிச்சேனை தாமரைகுளம் பகுதியில் கசிப்பு காய்ச்சுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சென்ற குழுவினர் மேற்கொண்ட முற்றுகையின் போது மூவாயிரம் (3000) மில்லி லீற்றர் கசிப்பு. நாலாயிரத்து எழுநூற்று ஐம்பது (4750) மில்லி லீற்றர் கோடா மற்றும் தளபாட உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை
வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எச்.எம்.எம்.பஸீல்
முன்னிலையில் முன்னிறுத்திய போது நாற்பத்தையாயிரம் (45000) ரூபா தண்டப்பணம்
விதிக்கப்பட்டு சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கல்குடா பொலிஸார்
தெரிவித்துள்ளார்.



