வட்டுக்கோட்டையில் பல்வேறு திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வட்டுக்கோட்டையைச் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற இக்கைது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பொலிஸார் குறித்த சந்தேகநபரைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் அராலி பகுதியில் உள்ள பெண் ஒருவரின் அலைபேசி திருட்டு, உறவினரின் நகை திருட்டு, தொலைக்காட்சி திருட்டு போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்படும்போது, பொலிஸார் அவரிடமிருந்து தங்கச் சங்கிலி ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.