திருகோணமலையில் இரகசிய தகவலின் அடிப்படையில் ஒருவர் கைது
திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெடிப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (07.10.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவல்
புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி அதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 09 டெடனேட்டர் மற்றும் 09 சேவா நூல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை - ஜின்னாபுரம் பகுதியைச் சேர்ந்த கே.எம்.சாதிக் (28 வயது) என தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
