சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது
சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சூரிச் நகருக்கு மேற்கே அமைந்துள்ள குதிரைப் பந்தய திடலில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 22 வயதான இத்தாலியப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேர தீவிர தேடுதலின் பின்னரே சந்தேகநபர் நேற்று(31) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இந்தத் தாக்குதலைத் தனி நபர் ஒருவரே நடத்தியிருக்கலாம் எனக் கருதுவதுடன், தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.