போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை
போயா விடுமுறை நாளில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து கல்முனையில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாறுவேடத்தில் கைது நடவடிக்கை
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் மாறுவேடத்தில் சென்று இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறு கைதானவர் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த சுமார் 40 பியர்கள் மற்றும் 25இற்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
