தேங்காய் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர்! ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை
தேங்காய் ஒன்று திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதிமன்றம் இவ்வாறு இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளது.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
தேங்காய் ஒன்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரை தென்னந்தோப்பு உரிமையாளரும், அவரது மகனும் இணைந்து பிடித்து, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபரை கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரட்ன விடுதலை செய்துள்ளார்.
மல்வத்துஹிரிபிட்டிய நில்மஹர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam