பதவியை பறித்த கோட்டாபய அரசுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி! புன்னகையுடன் முச்சக்கர வண்டியில் வீடு சென்ற சுசில்
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிரடியாக பதவி நீக்கியிருந்தார். அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுசில் பிரேமஜயந்த கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதனையடுத்து அவர் இன்று பதவி நீக்கப்பட்டிருந்தார். இதனிடையே, பதவி நீக்கம் செய்யப்பட்டமையானது தனது அரசியல் எதிர்காலத்திற்கு கிடைத்த வரம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்! - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை (Video)
அடுத்த அமைச்சரை பதவி நீக்க தயாராகும் ஜனாதிபதி? - வெளியாகியுள்ள தகவல்
ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை! - அரசாங்கத்திற்கு எதிராக திரும்பும் அமைச்சர்கள்?.
பதவி நீக்கம் தனது அரசியல் எதிர்காலத்திற்கான ஆசிர்வாதம்! - சுசில் பிரேமசந்திர