பிரபல நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்த விவகாரம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வாக்குமூலம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது பரபரப்புத் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று வரை சுஷாந்த் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக இருக்கும் நிலையில் சுஷாந்த் சிங் உடலுக்கு உடற்கூராய்வு செய்தவரின் வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது கூப்பர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஐந்து சடலங்களைப் பெற்றோம்.
உடலில் காயங்கள்
அந்த ஐந்து உடல்களில் ஒன்று வி.ஐ.பி. உடல். நாங்கள் பிரேத பரிசோதனை செய்யச் சென்றபோது, அவர் சுஷாந்த் என்றும் கூறப்பட்டது. அவரது உடலில் பல காயங்களும், கழுத்தில் இரண்டு முதல் மூன்று காயங்கள் இருப்பதை பார்த்தோம்.
பிரேத பரிசோதனை பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், சில புகைப்படங்களை மட்டுமே எடுக்குமாறு உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். எனவே அவர்களின் உத்தரவுப்படி நாங்கள் செய்தோம்.

சுஷாந்தின் உடலை முதன்முறையாகப் பார்த்தபோது, அது தற்கொலையல்ல, கொலை என உணர்கிறேன் என்று சீனியர்களிடம் உடனடியாக தெரிவித்தேன்.
நாங்கள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். இருந்தாலும், சீக்கிரம் படங்களை க்ளிக் செய்து, உடலை பொலிஸாரிடம் ஒப்படைக்கும்படி என் சீனியர்கள் என்னிடம் சொன்னார்கள் என கூறியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam