உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் : சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதி
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கண்டியைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த 2019 ம் ஆண்டு கண்டியை சேர்ந்த முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் என்பவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவரை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். என் .அப்துல்லாஹ் இன்று(08) பத்து லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணை மற்றும் வெளிநாடு செல்லத்தடை என்ற நிபந்தனையில் பிணையில் விடுவித்துள்ளார்.
சஹ்ரானின் குழு

சஹ்ரானின் குழுவை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்டியில் வைத்து முகம்மது பாறுக் முகம்மது ஹிலாம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்திலும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கண்டி மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதேவேளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விசாரணை

இதனையடுத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இவர் சார்பாக சட்டத்தரணி இஸ்மாயீல் உவைஸுல் ரஹ்மான் முன்னிலையாகி இவரை பிணையில் விடுவிப்பதற்கான முன்நகர் பத்திரம் கடந்த திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று (08) வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். என்.அப்துல்லாஹ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த அரச சட்டதரணி எம்.ஏ.எம்.
லாபீர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிரிக்கு பிணை வழங்க சம்மதம்
தெரிவித்ததையடுத்து பத்து லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணை, வெளிநாடு
செல்லத்தடை என்ற நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல மேல் நீதிமன்ற நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri