கிளிநொச்சியில் வனஜீவராசி திணைக்களத்தினரால் மீட்கப்பட்ட பொருட்கள்: ஒருவர் கைது (Photos)
கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மாங்குளம் பகுதியில் உள்ள கல்குவாறிப்பகுதியில் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கை நேற்றுமுன் தினம் (01.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாங்குளம் கல்குவாறி பகுதியில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் உள்ளூர் துப்பாக்கியும் 100கிராம் நிறைகொண்ட ஈயம் மற்றும் தீக்குச்சி மருந்து துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஒருவர் கைது
இந்நிலையில் வாள் மற்றும் மான் கொம்புகள் இரண்டும் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam