வாழைச்சேனை பிரதேசத்தில் உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் அலுவலக உணவு பாதுகாப்பு பரிசோதகர்கள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து வாழைச்சேனை பிரதேசத்தில் உணவகங்கள் மீது மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது நான்கு நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பதினொரு உணவகங்களில் பரிசோதனை செய்யப்பட்டதில் நான்கு உணவகங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு வழக்குக்கும் ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
குறித்த திடீர் சோதனையின் போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக உணவு பாதுகாப்பு பரிசோதகர்கள், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பரிசோதகர் இ.நிதிராஜ், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam