பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் கலவரத்தை ஏற்படுத்த ஞானசார தேரர் சதி
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை விடுவிக்குமாறு கோரி சில அரசியல் செயற்பாட்டாளர்களால் சத்தியாகிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மற்றும் பெங்கமுவே நாலக தேரர் மற்றும் ஞானசார தேரர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
அதில் கருத்து தெரிவித்த ஞானசார தேரர் சுரேஷ் சலேவிற்கு எதிராக பேசுபவர், குறிப்பிாக கத்தோலிக்க திருச்சபை மெல்கம் ரஞ்சித், சிறில் காமினி ஆகியோரை விடுதலை புலிகள் அமைப்பினரோடு தொடர்புபடுத்தி பேசியுள்ளார். இந்த கருத்துக்கள் இனவாதத்தை தூண்டுவதாக உள்ளது.
மேலும் இலங்கையில் மட்டுமா குண்டு வெடித்தது, பல உலக நாடுகளிலும் குண்டுகள் வெடித்துள்ளது, ஆனால் அங்குள்ள அருட்தந்தையர்கள் யாரும் இவ்வாறு இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை தேடவில்லை என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்கள், அதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள சர்ச்சைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் அதன் தாக்கங்கள் பற்றியும் பார்க்கின்றது லங்காசிறியின் News Insights நிகழ்ச்சி..
அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் மோதல்: பரஸ்பர தாக்குதல்களுக்குப் பின்னர் ட்ரம்பும் ஈரானும் புதிய எச்சரிக்கை