கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ள சலே..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
அசாத் மௌலானா சுரேஷ் சலே மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஜனாதிபதி ஆணைக்குழு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்திருந்தபோதிலும், தமிழ் புலம்பெயர் சமூகத்தினரை திருப்திப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அவரை கைது செய்துள்ளதாக ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கம் (ARFRO) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
சேனல் 4 தொலைக்காட்சிக்கு வாக்குமூலம்
பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கூற்றுப்படி, ஐக்கிய இராச்சியத்தில் சேனல் 4 தொலைக்காட்சிக்கு அசாத் மௌலானா என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாத் மௌலானா, விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளரும் ஆவார். அவர் நாட்டை விட்டுத் தப்பிச்சென்று சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். அவருக்கு எதிராக இரண்டு பிடியாணைகள் நிலுவையில் உள்ளன.
குற்றப்புலனாய்வுத்துறை பணிப்பாளரும் பிரான்சுக்குச் சென்று, பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அசாத் மௌலானாவை சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸில் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிவது வருத்தமளிக்கிறது அல்லவா?
சலே மீதான குற்றச்சாட்டுகள்
அசாத் மௌலானாவின் சலே மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.மௌலானா கூறியது பொய் என்பதை அந்த ஆணைக்குழு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளது.

இருப்பினும், தடுப்புக்காவலில் சுரேஷ் சலே மிகவும் இழிவான, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளார்.
ஒரு போர் வீரரை இத்தகைய முறையில் நடத்துவது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர் சமூகத்தினரை மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும், ஒரு போர் வீரரை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு தெரிவிக்கிறோம்," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி
இதற்கிடையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுத்து வைக்கப்பட்டிருந்த சிஐடி (CID) காவலில் மேற்கொண்ட உண்ணாநிலை போராட்டத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சுமார் 13 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருவதுடன், தொடர்ந்தும் அவரது உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மற்றும் சிறைச்சாலை நிலைமைகள் குறித்த சர்ச்சைகளும் நீடித்து வருகின்றன.
சலேவின் மகளும் மகனும் இன்று காலை (20) அவரது நலம் விசாரிப்பதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு