தமிழீழ விடுதலைப்புலிகள் பிடித்திருந்தால் கூட இவ்வாறு நடத்தியிருக்கமாட்டார்கள்! கவலையில் சலே
தமிழீழ விடுதலைப் புலிகள் என்னை பிடிந்திருந்தால் கூட இவ்வாறான இழிவான செயற்பாடுகள் மற்றும் முகம் சுழிக்கும் சித்திரவதைகள் கொடுத்திருக்கமாட்டார்கள் என அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தன்னிடம் குறிப்பிட்டதாக முன்னாள் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குற்றவியல் விசாரணைகள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் குறிப்பிட்டவை
சுரேஸ் சலேவின் சகோதரர் மற்றும் மகனை தவிர மூன்றாம் நபராக நான் மட்டுமே அவரை சந்தித்துள்ளேன். மேலும் அவரின் குடும்பம் பெயர் குறிப்பிட்ட சட்டத்தரணி என்ற வகையில் அவரை சந்தித்து கலந்துரையாடினேன்.
தான் போர் களத்தில் எவ்வாறு செயற்பட்டேன் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவார்கள். அந்த கௌரவத்தை அவர்கள் தந்திருப்பார்கள் என்று கவலையுடன் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொரு அறையில் தடுத்து வைத்திருக்கும் நிலையில் சுரேஷ் சலேவை மலசல கூடம் முன்னால் இருக்கும் அறையில் தடுத்து வைத்துள்ளனர்.

அவரை பனிஸ்மன்ட் செல்லிலேயே அடைத்து வைத்துள்ளனர். யாருடனும் கதைக்க கூடாது. மேலும் புத்தகம் வாசிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சலே மேலும் இவ்வாறு குறிப்பிட்டார். சேர் எனது தாத்தாவும் இராணுவத்தில் இருந்தவர். அத்தோடு எனது இரு சகோதரர்களில் ஒருவர் மேஜர் ஜெனரல் மற்றையவர் கொமோன்டோ அணியில் இருந்து இறுதி போரில் காயமடைந்தவர்.
சலேவை கடுமையாக நடத்துவதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவே அவரின் பேச்சில் இருந்து எனக்கு தெரிகிறது.
அதனால் மஜிஸ்திரேட் தன்னை பார்க்க வரும் போது மனநோய் வைத்தியரின் சிகிச்சை தேவையென அறிவிக்குமாறு குறிப்பிட்டேன் என தெரிவித்திருந்தார்.