கடவுச்சொல்லை வழங்க மறுக்கும் சுரேஷ் சலே! நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களம் இது தொடர்பில் இன்றைய தினம்(25.08.2026) நீதிமன்றில், குற்றம் சுமத்தியுள்ளது.
தம்மை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதனை எதிர்த்து சலே தாக்கல் செய்த ரீட் மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுரேஷ் சலேவின் இலத்திரனியல் சாதனங்களின் கடவுச் சொற்களை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுரேஷ் சலேவுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும்..
பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, சந்தேக நபரான சலே தொடர்பில் குரோத உணர்வுடன் செயற்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்ற தவிர அனைத்து மனுக்களும் சலேவிற்கு சலுகை வழங்க வேண்டும் என்றே கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வழக்குத் தொடர்புபடாத இந்த இடையீட்டு மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுரேஷ் சலேவின் மனுவை பரிசீலனை செய்வது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்களை அழிக்க அரங்கேற்றிய துப்பாக்கிச்சூடுகள்
YOU MAY LIKE THIS VIDEO