நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹெல்பத்தர பத்மே! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவை செப்டம்பர் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (25) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலை
கெஹெல்பத்தர பத்மே மற்றும் மேலும் மூன்று பேர் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதுவரை சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (25) முதன்முறையாக கெஹல்பத்தர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.