எரிபொருள் QR குறியீடு முறைமை பயன்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
மத்திய கிழக்கில் மோதல்கள் இன்னும் முடிவடையாததால், எரிபொருள் வழங்குவதற்கான கியூஆர் (QR) முறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (25.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் வழங்குவதற்கு கியூஆர் முறை
மத்திய கிழக்கில் மோதல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், எரிபொருள் வழங்குவதற்கு கியூஆர் முறையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டியிருக்கும் இருப்பினும், எரிபொருள் வழங்குவதற்கு கியூஆர் முறை பயன்படுத்தப்பட்டாலும், எரிபொருள் நுகர்வு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே குறைந்துள்ளது.

மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்ச்சூழல் இன்னும் முடிவடையவில்லை. ஹோர்முஸ் நீரிணையில் பல பிரச்சினைகள் உள்ளன. எண்ணெயின் விலை ஏறியும் இறங்கியும் வருகின்றது.
எண்ணெய் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒரு நாடாக, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, இந்த சூழல் முடிந்தவரை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் விலை அதிகரித்திருந்தாலும், கியூஆர் குறியீடு (QR code)நிறுவப்பட்டிருந்தாலும், டீசல் நுகர்வு 10% குறைந்துள்ளது.பெட்ரோல் நுகர்வு 9% குறைந்துள்ளது. அவை அத்தியாவசிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO